பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் வாங்கியதில் முறைகேடு – 16 பேர் மீது வழக்குப் பதிவு
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட 16 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்தது.
பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான 500 கம்ப்யூட்டர்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், யுபிஎஸ் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டது.
85 லட்ச ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்ட இந்த உபகரணங்களை மொத்தமாக டெண்டர் விடாமல் தனித்தனியாக வாங்கி இருப்பதும் இதில் முறைகேடு நடந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து இந்த முறைகேடு தொடர்பாகக் கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் துணைவேந்தர் கணபதி, முன்னாள் பதிவாளர்கள் மோகன், வனிதா, முன்னாள் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அங்கையற்கண்ணி, ராஜேந்திரன் ,தேவி, ஜெயபால், ஞானசேகரன், சாத்தப்பன், சுரேஷ், சரவணகுமார், காமேஷ் உட்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முன்னாள் துணைவேந்தர் கணபதி, பணிநியமன ஆணை கொடுப்பதற்கு லஞ்சப் பணம் வாங்கும் போது லஞ்ச போலீசாரால் பணியில் இருந்த பொழுதே கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது முன்னாள் துணைவேந்தர் மீது மேலும் ஒரு லஞ்ச வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க