அரசியல்

திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது – சீமான்

திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒன்றினைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது வரவேற்கத்தக்கது, அவர்  ஒருங்கிணைத்தால் மகிழ்ச்சி எனவும் இதில் முதன்மையான பங்காக என்றுடையது இருக்கும், ஆனால் எல்லாரும் ஒன்றாக இருப்பார்கள், நான் மட்டும் தனியா இருப்பேன் என நாம் தமிழர் கட்சித் தலைவர்  சீமான் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் : புதிய கல்விக் கொள்கையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இதைத் தமிழக அரசு நேரடியாகச் செயல்படுத்தப் பார்ப்பதாகக் கல்வியாளர் ஜவகர் உள்ளிட்டோர் தெரிவித்து இருக்கின்றனர்.

இது நம் குழந்தைகளுக்கு எழுதி வைக்கப்பட்ட மரணசாசனம், மாணவர்கள் விரும்பிய கல்வியைப் படிக்கப் பெரிய தடையாக இருக்கின்றது எனவும், கல்வி என்பது சுமையாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். மருத்துவம் உட்பட எல்லாவற்றுக்கும் தேர்வு இருக்கின்றது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியானதா எனக் கேள்வி எழுப்பினார். நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களுக்கு என்ன தேர்வு இருக்கின்றது எனவும், எந்த  தகுதியும் இல்லாதவர் இந்த நாட்டை ஆள முடியும், மற்றவற்றிற்குத் தேர்வு எழுத வேண்டும் என்பது சரியானது கிடையாது எனவும் தெரிவித்தார்.

தென்கொரியாவில் 8 வயதில் படிப்பைத் தொடங்குகின்றனர். ஆனால் இங்கு  8 வயதில் பொதுத் தேர்வு எழுத சொல்கின்றீர்கள். இப்போது நீட் தேர்வு எழுதிய தங்கை இறந்து  விட்டார் எனத் தெரிவித்த அவர் , கல்வியை வியாபாரம் ஆகிட்டு சமகல்வி எனச் சொல்வதே மோசடி எனவும் தெரிவித்தார்.உறுப்பினர்கள் என்ன சாதித்து இருக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார். டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி மூன்று வருடங்களில் அடித்து இருக்கின்றனர். கக்கூஸ் கழுவ 450 கோடி என்கின்றனர்.கக்கூசில்தான் இவர்களை  அடைக்க வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

தொகுதி மறு சீரமைப்பை நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கின்றேன். இங்கே அனைத்து கட்சி கூட்டம் நடத்துகின்றனர் இதில் எந்த பயனும்  என தெரிவித்த அவர், 30 கோடி மக்கள் தொகைக்கு 543  என்ற  எண்ணிக்கையில் எம்.பி வைத்து இருந்தார்கள் அதை இப்போது , 6 சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை 3 சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனக் கொண்டு வர வேண்டும் , இதை நாங்கள் முன்மொழிகின்றோம் எனத் தெரிவித்தார்.

ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடும் இஸ்லாமியர் நான் இல்லை என தெரிவித்த அவர்,  தம்பி விஜய் இதை  விரும்புகின்றார். விஜய் நோன்புக் கஞ்சி கொடுத்ததால்  விலை வாசி ஏறியது, மின்தடை ஏற்பட்டது என்றால் விவாதிக்கலாம். அதனால்  நாட்டுக்கும் மக்களுக்கும் அதனால் என்ன பாதிப்பு  எனவும் கேள்வி எழுப்பினார். விஜய்யை அண்ணன் என்று அழைக்க அக்கட்சியினர் திட்டமிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, எத்தனை பேரும் அண்ணன் என இருக்கலாம்.

மீனவர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுவது வரவேற்கத்தக்கத்து. மீனவர் விவகாரத்தில் காங்கிரஸ்,பா.ஜ.க விற்கு தமிழர்களின் உணர்வுகள் அக்கறை இல்லை இந்த மக்களின் எதிர்காலத்தைப் பற்றி திமுக, அதிமுகவிற்கு அக்கறை இல்லை எனத் தெரிவித்த அவர், கேரள மீனவர்கள் எத்தனை பேரை இலங்கை அரசு கைது செய்து இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

அன்பின் மிகுதியால் வந்த சொல் அண்ணன் எனவும், அம்மா என்று யாரும் முதலில் ஜெயலலிதாவைச் சொல்ல வில்லை. செல்வி என்று சொன்னார்கள். வயதாக வயதாகப் பாசத்தில் அம்மா என்று சொன்னார்கள் எனவும் தெரிவித்தார். அன்பின் மிகுதியில் சொல்லக் கூடிய வார்த்தை அது எனவும் தெரிவித்தார்.

இந்த கலந்தாய்வு தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக நடத்தப்படுகின்றது எனவும், எங்களுக்கு  ஊடக ஆதரவு இல்லை, அதனால் நாங்களே ஊடகமே மாறனும்,  குடும்பத் தலைவிக்கு ஆயிரம் கொடுப்பீர்கள்,  இலவச பொருட்கள் தருகின்றோம் என எங்களால் வாக்குறுதி கொடுக்க முடியாது என்ற நிலையில் அதற்கு ஏற்றபடி கட்சியினரைத் தேர்தல் பணிக்குத் தயார் செய்ய வேண்டும் எனவும், எப்போதும்  நான் வளர்கின்றேன்  என்று சொல்ல முடியாது,  வளர்ந்துவிட்டோம் எனச் சொல்ல வேண்டுமே என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்   சீமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!