கோயம்புத்தூர்

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலாவிய சிறுத்தையால் பரபரப்பு , கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நாளை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் அருகே சிறுத்தை உலாவியதாக மாணவர் ஒருவர் அங்கிருந்த உடற்பயிற்சி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அப்போது உடற்பயிற்சி ஆசிரியரும் சென்று பார்த்தபோது சிறுத்தை நடமாட்டம் இருந்ததை கண்டுள்ளார். பின்னர் கோவை சரக வனத்துறையினருக்கு ஆசிரியர் தகவல் அளித்தார்.

மேலும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு சிறுத்தையின் கால் தடத்தை உறுதி செய்தனர். இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மீண்டும் சிறுத்தை வருவது உறுதியானால் அதனை கூண்டு வைத்து பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளையும் வனத்துறையினர் செய்துள்ளனர். இதனிடையே நாளை நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!